உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,918 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வருகை தந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 2,765 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது142 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

‘நிலையான அரசாங்கம் இன்றேல் இலங்கை செயலிழக்கும்’

கொழும்பினை அதிரவைக்கும் டெல்டா