உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பிரேமலால் ஜயசேகர சிறைச்சாலை மருத்துவமனையில்

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்