உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசர கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 86 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகாமாக உபயோகிக்க தீர்மானம்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்