உலகம்

கொரோனா தொற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை

(UTV |  அமெரிக்கா)  – கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில், கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி தற்போது 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,902 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 81 ஆயிரத்து 368 ஆக உள்ளது.

ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 103 ஆக உள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25.08 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.72 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விடுவேன் – டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

editor

வெளிநாட்டவர்களுக்கு மறு அறிவித்தல் வரை சவூதி அரேபியா தடை

Service Crew Job Vacancy- 100