உள்நாடு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,890 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினம்(15) கொரோனா தொற்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டது

துருக்கியிலிருந்து நாட்டிற்கு வந்த வௌிநாட்டு பிரஜையொருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பி இருவருக்கும் மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில்கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்!