உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(17) 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 676 ஆக அதிகரித்துள்ளதுடன் தற்போது 213 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதியின் புதிய செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் – இம்ரான் எம்.பி

editor