உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதன்படி, தற்போதைய நிலவரப்படி,கொரோனாவால் உலக அளவில் 3,013,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை 207,900 உயிரிழந்துள்ளதுடன், 894,759  பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் நேற்றைய தினம் மட்டும் 73,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் நேற்றைய நாளில் மாத்திரம் ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இதுவரை 20,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு

ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!