உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தாக்கத்தால் பாத்தேமேஹ் ரஹ்பர் உயிரிழப்பு

(UTVNEWS | IRAN) -ஈரான் நாட்டின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் பாத்தேமேஹ் ரஹ்பர் கொரோனா தாக்கத்தால் இன்று உயிரிழந்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

மேற்காசிய நாடான ஈரானில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர்.

மேலும் புதிதாக 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

editor

மின்தடை குறித்து மின்சார சபையின் அறிவிப்பு