கிசு கிசு

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள ப்ரேன்டிக்ஸ் இனால் ரூ.6250 மில்லியன் நிதி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பூசியினை 6250 மில்லியன் ரூபா செலவில் அரசுக்கு பெற்றுக் கொடுக்க ப்ரேன்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறுவன பிரதானிகள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ப்ரேன்டிக்ஸ் நிறுவன தலைவர் அஷ்ரப் ஓமர் இனால் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எந்தவொரு நேரத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க தெரிவிக்கையில், குறித்த நிதியானது அரசுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொள்ள பாரியதொரு அனுசரனையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிக்கு தேவையான நிதியானது 200 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரேன்டிக்ஸ் நிறுவனத்தினால் குறித்த நிதியில் 1/4 பகுதியான 50 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ஸ…

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் மோப்ப நாய்கள்

பாராளுமன்றுக்கு சென்ற மேலும் இருவருக்கு கொரோனா