உள்நாடு

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சமூகத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி விசேட கலந்துரையாடலொன்றை தற்போது நடாத்துகின்றது.

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

திவுலபிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

editor

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை