உள்நாடு

கொரோனா கொத்தணிகளின் அதிகரிப்பு : ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா பரவல் ஊடுருவி வரும் நிலையில் இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 20 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேருவளை துறைமுகத்தில் இருந்து பேலியகொடை மீன்சந்தை வரை சென்ற வேன் ஒன்றின் சாரதிக்கும் அவருடன் தொடர்பை பேணியவர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

editor

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்