உலகம்

கொரோனா காரணமாக 70,000 கைதிகள் விடுவிப்பு

(UTV|ஈரான்) – கொவிட் – 19 பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் சுமார் 70,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தலைமை நீதிபதியின் தகவலுக்கமைய அந்நாட்டு நீதித்துறை நேற்று(09) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், குறித்த கைதிகளின் விடுதலையானது சமூக பாதுகாப்பின்மையை ஏற்படுத்தாத வகையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விடுவிக்கப்பட்ட கைதிகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருக்குமென மேலும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் பலி

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

‘ஜி – 20″ அமைப்பின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடல்