உள்நாடு

கொரோனா எதிரொலி : மே தினக் கொண்டாட்டங்கள் இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கொவிட்-19 தொற்று பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதன்படி கட்சியின் அனைத்து மே தினக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்படும்.

முன்னதாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருடன் மே தினக் கொண்டாட்டங்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டிருந்தன.

எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு