உள்நாடு

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவு நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னரே எடுக்கப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார செயலாளரிடமிருந்து பெறப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதுள்ள சட்டத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்ட உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உடல்களின் இறுதி சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை அறிய மற்றொரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

‘மானிட சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் நாளாக ரமழான் பெருநாள் அமையட்டும்’

இதுவரையில் 93,884 பேர் பூரண குணம்