உள்நாடு

கொரோனா – இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட பகுதிகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக அடையாளங் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

43 வயதையுடைய குறித்த சீனப் பெண், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக நேற்று(27) உறுதிப்படுத்தப்பட்டது.

சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 19 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இதற்கமைய, குறித்த பெண்ணுடன் இலங்கைக்கு வருகை தந்த ஏனைய சீனப் பிரஜைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அவர் தங்கி இருந்த சுற்றுலா தளங்களையும் விடுதிகளையும் குறித்த பெண் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

வெட்டு காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.