உள்நாடுவிளையாட்டு

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

(UTVNEWS | COLOMBO) -தேசிய வைத்தியசாலைக்கு, மேலும்  உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸால் இதுவரை 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேசிய வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்களித்துள்ளனர்.

அவர்களின் நிதியைக்கொண்டு,  கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முக்கியமான தேவைகளில் ஒன்றான தேசிய மருத்துவமனைக்கு வீடியோ லாரிங்கோஸ்கோப்புகளை  (Laryngoscopes) வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகரணங்கள் இலங்கைக்கு வந்தவுடன் தேசிய வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் ரூ 25 மில்லியன் நிதி உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்