உள்நாடு

கொரோனா அச்சுறுத்தல் கருத்திற்கொண்டு கைதிகளை விடுவிக்குமாறு, கோரிக்கை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுவிக்கப்படக்கூடிய கைதிகளை விடுவிக்குமாறு, பல்வேறு அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஜனாதிபதிக்கும், துறைசார் முக்கியஸ்த்தர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் நிலவுகின்ற வசதிக்குறைப்பாடுகளால், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளால் இடைவெளி, கைகழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவும் முடியாத நிலைமை உள்ளது.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களை துரித நீதிவிசாரணை, நிர்வாக நடவடிக்கைகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு போன்ற பொறிமுறைகளின் அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், அடையாளம் கொள்கை ஆய்வு மையம், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்டவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்தன தேரர்

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

இன்று சர்வதேச ஜனநாயக தினம்