விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல் – ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவிருந்தது.

இன்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது,

இதன்போது, தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனால் இன்றைய போட்டி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

கோமதியின் தடை உறுதி

கோலிக்கு நேர்ந்த கதி