உலகம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தல்

(UTV|மாலி) – உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் தொடங்கி தற்போது வரை உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மார் 29-ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாலி நாட்டிலும் தாக்கியுள்ளது. அந்த நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் திட்டமிட்டப்படி நேற்று தேர்தல் நடைபெற்றது.

எதிர்வரும் 19 ஆம் திகதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

சொந்தமாக நாடும் இல்லை.. வீடும் இல்லை  

இந்தியாவில் 1 மில்லியனை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு