உள்நாடு

கொரோனாவை தடுக்க ‘அவிகன்’ இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 என அறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அவிகன் (AVIGAN) என்ற மருந்தானது தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது கொரோனா வைரஸிற்கான முழுமையான மருந்தாக இல்லாதபோதும் பதிலாக பயன்படுத்தக்கூடியது என்று வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

“அவிகன்’ கொரோனா தொற்றுக்கு தகுந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்டால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அதிகளவில் அதனை கொள்வனவு செய்யும் என்றும் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த வில்லை உலகளாவிய ரீதியில் எபோல வைரஸ் பரவலின் போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

கொரோனா உடல் தகனம் : குழு அறிக்கையின் பின்னரே தீர்மானம்

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!

 மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்