உள்நாடு

கொரோனாவுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.

சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன் மாணவர்கள் கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை அழைத்துவரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு பாடசாலைகளுக்கு சமூகமளித்ததை காணமுடிந்தது.

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு