உலகம்

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி

(UTV | பிலிப்பைன்ஸ் ) –  பிலிப்பைன்ஸ் நாட்டை தாகிய ‘மோலேவ்’ புயல் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய நாடுகளில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட இரண்டாவது நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது. இங்கு இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 180 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் மேலும் 7 ஆயிரத்து 114 பேரை பலிகொண்டுள்ளது. .

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘மோலேவ்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களை புயல் தாக்கியுள்ளது.

மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தொடங்கி 160 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது.

இந்த புயல் காரணமாக ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ‘மோலேவ்’ புயல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

8 கோடியை அண்மிக்கும் உலக கொரோனா பாதிப்பு

கொரோனா பிடியில் மெக்சிகோ

ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’