உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு

(UTV| கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 789 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமரின் அழைப்பினை ஏற்று ஹர்ஷா – எரான் பிரதமர் அலுவலகத்திற்கு

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை