உலகம்

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

(UTV | ஸ்பெயின்) – ஸ்பெயினில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஸ்பெயினில் முடக்க செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

குறிப்பாக மேட்ரிட் நகரில் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் கடுமையான முடக்க செயற்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 5 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் ஸ்பெயினில் 30,495 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 30 பேர் பலி

நியூசிலாந்தில் 4 வாரங்களுக்கு ஊடரங்கு

இந்தியாவினால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: இமானுவல் மேக்ரான் நம்பிக்கை

editor