உள்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

(UTV | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த கடற்படை உறுப்பினர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் குணமடைந்து வெளியேறியுள்ளார் என்றும் அவர் இப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 187 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை,  இதுவரை 718 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின்சக்தி, வலுசக்தி துறைகளை காட்டிக் கொடுத்த அரசாங்கம் – எட்கா ஒப்பந்தத்தால் எதிர்கால சந்ததியினரின் தொழில் பறிபோகும் – விமல் வீரவன்ச

editor

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

மூன்று மாதங்களுக்கு 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு