(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் துறை பணியாளர்கள் தொடர்பான விபரங்களை தொழில் திணைக்களத்திடம் கையளிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொழிலை இழந்துள்ள நபர்களுக்கு அரசாங்கத்தினால் ஏதேனும் சலுகைகளை பெற்றுக்கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயும் வகையில் இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news.png)