சூடான செய்திகள் 1

கொபி அனான் சிறந்ததோர் உலகை கட்டியெழுப்புவதற்காக வழிகாட்டிய தலைவர்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஐ.நா. சாசனத்தின் நெறிமுறைகள், பெறுமானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப இரண்டு தொடர்ச்சியான ஐந்தாண்டு காலங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு தலைமைதாங்கிய கொபி அனான், அவ்வமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதகுலத்தின் மனச்சாட்சி ஆகியவற்றுக்காக உறுதியுடன் குரல் கொடுத்து வந்தார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமான கொபி அனான்னின் மறைவையிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குட்டேரஸ் அன்டோனியோவுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொபீ அனான்னின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவரிடம் காணப்பட்ட உத்வேகம் அளிக்கும் திறன், அவரது ஞானம், உரையாடல் மூலம் தீர்வுகளை சுட்டிக்காட்டும் அவரது மென்மையாக பேசும் பாணி ஆகியவை உலக அரங்கில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறந்ததோர் உலகை கட்டியெழுப்புவதற்காக வழிகாட்டிய தலைவர் என்ற வகையில் உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரை கண்ணியத்துடனும் நன்றியுடனும் நினைவுகூருவர் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்தினதும் இலங்கை மக்களினதும் சார்பில் நன்றியை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை ஆக்கிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்