சூடான செய்திகள் 1

கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்க அமைச்சரவை அனுமதி..

(UTVNEWS | COLOMBO) – கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை அதாவது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பல்வேறான வெடிப்பைக் கொண்ட 1990 – போர் ஆயுதம் அடங்கிய மிகவும் மோசமான அழிவைக் கொண்ட ஆயுத வகையைச் சேர்ந்த கொத்துக் குண்டை தவிர்ப்பது தொடர்பான உறுதிப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் இலங்கை மனிதநேய ஆயுத ஒழிப்புக்காக ஆயுத ஒழிப்புக்காக முன்னிற்கும் நாடு சாதகமான செயற்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆற்றல் கிட்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் பிராந்திய சமாதானம் பாதுகாப்பைப் போன்று சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பை கவனத்திற் கொண்டு கொத்து குண்டு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு அல்லது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இந்த நாட்டின் சட்டக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

இதற்கமைவாக தேவையான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒக்டோபர் 8ம் திகதி வரை கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை நடைபெறும்

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்