சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை ஶ்ரீராமநாதன் மாடி பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 09 மில்லிமீட்டர் தோட்டாக்கள் 06 உம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி