வணிகம்

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

(UDHAYAM, COLOMBO) – கொட்டகல தமிழ் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் மாணவர்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வசதிகளில் ஆறு கழிவறைகள் உள்ளிட்ட பல சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக சுமார் ஐந்து லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் புதிய நீர் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பிரதேச மக்களினால் குறித்த பாடசாலைக்கு சுகாதார வசதிகள் அடங்கிய கழிவறைகளின் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியினால் குறித்த பாடசாலை சுகாதார வசதிகள் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இராணுவ தளபதியினால் மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சுகாதார திட்டத்தின் நிர்மாணப்பணிகளில் பொறியியல் சேவைகள் படையணியின் படைவீரர்கள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படைவீரர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

Related posts

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது…

வாகன விலைகளில் மாற்றம்?