உள்நாடு

கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்

(UTV | கொழும்பு) – கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும் கொரோனா நெருக்கடி காலத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக மார்ச், ஏப்ரல், மே மாத கொடுப்பனவுகளை செலுத்துவதில் இலங்கை மின்சார சபை சலுகை வழங்கியிருந்தது.

எனினும், ஜூன் மாத கொடுப்பனவை வழக்கம் போல செலுத்தலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணம் சரியானது என்றும், பாவிக்கப்பட்ட மின் அலகிற்கு ஏற்பவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எந்த வாடிக்கையாளரும் கருதினால், அவருக்குரிய கணக்கிலக்கத்தை சரி பார்த்துக் கொள்ளலாமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கண்கீட்டில் தவறிருப்பது நிரூபணமானால் பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளலாமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு