சூடான செய்திகள் 1

கைவிடப்பட்ட 2 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது

(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக கைவிடப்பட்ட 2 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனைத்து பாடவிதானங்களும் உள்ளடக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் யால சரணாலயம்

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்