அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணையுங்கள் – சஜித்துக்கு ஆஷு மாரசிங்க பகிரங்க அழைப்பு

editor