சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி – ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த 23 ஆம் திகதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

சஜித் பிரேமதாச – முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு