உள்நாடு

சிறை கைதிகள் 1,460 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணை வழங்கக்கூடிய சுமார் 1,460 பேரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W. தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவியுள்ள நிலையில், சிறைச்சாலைகளுக்குள் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் சிறைச்சாலைகளில், பிணை வழங்கக்கூடிய கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து பவி’யின் உத்தரவாதம்

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்