சூடான செய்திகள் 1

கைதிகளை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்ற முன்னிலையில் நிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(22) ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதிகளை பாதுகாக்கும் ஒன்றிணைப்பின் ஏற்பாட்டாளர் நந்திமால் டி சில்வாவினால் குறித்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அதில் சிறைக் கைதிகளை தாக்கிய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள உள்ளிட்ட 08 பேரினது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு