உள்நாடு

கைதான 12 மாணவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு ) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(11) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சை!