உள்நாடு

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

(UTVNEWS| TRINCOMALEE) –தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள பரக்கும்புற பகுதியில் 03 கைக் குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டுகளை, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் வைத்திருக்குமாறு அவருக்கு வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து, குறித்த இராணுவ வீரரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 73

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு