சூடான செய்திகள் 1

கைக்குழந்தை சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-பியகம, வல்கம, மல்வானா பகுதியில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மாதமான குழந்தையின் சடலமே இவ்வாறு பியகம பொலிஸாரால் வீடு ஒன்றின் குப்பை மேட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின் அதே இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறித்த குழந்தையின் உறவினர்கள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் தெரிய வராத நிலையில், பியகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

வெலிகமயில் துப்பாக்கி சூடு

பொதுப் போக்குவரத்தை வலுவடையச் செய்ய வேண்டியது போக்குவரத்து அமைச்சரே

வாக்காளர் இடப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை 19 உடன் நிறைவு