வகைப்படுத்தப்படாத

கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின் போது வீடொன்றில் இருந்து வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றும் , போரா 16 ரக துப்பாக்கிக்கான 4 தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை விசேட அதிரடிப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று இந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக , குறித்த வீட்டில் இருந்து விளையாட்டு ரிவோல்வர் ஒன்றும் மற்றும் கஜமுத்து என சந்தேகிக்கப்படும் இரண்டு பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தலங்கம – வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவராவர்.

இவர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

2018 சர்வதேச நுகர்வோர் உரிமை தினம் இன்று

Several Muslim Parliamentarians accepts former Ministerial portfolios

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு