வகைப்படுத்தப்படாத

கைகளை வெட்டிக் கொண்ட 41 மாணவர்கள்!!

(UDHAYAM, COLOMBO) – பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்ட 41 மாணவர்கள் காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

நேற்று அந்த பாடசாலையின் ஆசிரியர்களால் இந்த மாணவர்கள் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவற்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 11 தரங்களில் கல்வி கற்று வரும் இந்த மாணவர்களில் பலர் முதலில் தமது கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் ஏனைய சிலர், அவர்களை பின்பற்றி பிளேட் மற்றும் கூரிய கருவிகளை பயன்படுத்தி தமது கைகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மாணவிகளும் சிலர் வெட்டு காயங்களை ஏற்படுத்தி கொண்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், காவற்துறையில் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள், கடுமையாக எச்சரிக்கைப்பட்டு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக காவற்துறை குழுவொன்று இன்றைய தினம் அந்த பாடசாலைக்கு செல்லவுள்ளது.

 

 

 

 

Related posts

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா

UTV MEDIA WORKSHOP REGISTRATION – 2024

கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு