கேளிக்கை

‘கே.ஜி.எஃப் 2’ : செப்டம்பரில்

(UTV |  பெங்களூர்) – யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை செப்டம்பர் 9ம் திகதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

ஜூலை 16ம் திகதி ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்து வருவதால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு. இதுவரை 95% பணிகள் முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் டப்பிங் பணிகளை முடிக்க வேண்டும்.

இதனால் செப்டம்பர் 9ம் திகதி ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சினிமா நடிகரை மணக்க மாட்டேன்- காஜல்

ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அல்லு அர்ஜூன்

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் கைது