உள்நாடு

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நான்கு பேர் இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 180 கிலோ கிராம் கேளர கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆந்திரா மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே இந்த கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கேரள கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 21 லட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகத்திற்குரியவர்கள் சர்வதேச கடல் பரப்பில் வைத்து ஏனைய நாடுகளுக்கு கஞ்சா போதைப்பொருளை பறிமாற்றிய வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு