உலகம்

கேரளா கடும் மழை – 15 பேர் பலி

(UTV|இந்தியா) – இந்தியாவின் கேரள மாநிலத்தில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி