உள்நாடு

கெஹெலியவின் வாயடைக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(UTV | கொழும்பு) – தாதியர்கள், இடை மற்றும் துணை மருத்துவ சேவை வழங்குநர்களின் சம்பளப் பட்டியல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சர் வெளியிட முன்வந்தால், சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் சம்பளப் பட்டியலை வெளியிடுவோம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் எச்சரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மேலதிக செயலாளர்களின் சம்பளப் பட்டியல் ஆகியவற்றையே வெளியிடவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்க தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான அதிகாரிகள் நாளொன்றுக்கு எவ்வவு சம்பாதிக்கிறார்கள், தரைமட்ட ஊழியர்கள் ஒரு மாதத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியவரும் என்றார்.

கொரோனா தொற்றின் ஆரம்பக் கட்டங்களில் கடமையில் இருந்தம் அதிகாரிகளுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு அல்லது பாதுகாப்பு உபகரணங்களை வழங்க சுகாதார அமைச்சினால் முடியவில்லை என்று அவர் குற்றம் சுமத்தினார்.

உயர் பதவிகளிலுள்ள அதிகாரிகளுக்கு, அடிமட்ட ஊழியர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் போராட்டங்கள் தெரியாது எனவும் மேலதிக நேரத்துக்கான அவர்களின் கோரிக்கை சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related posts

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது

ஏழு விமானங்கள் ரத்து!