(UTV | துபாய்) – இன்று இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெய்ல் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல்லைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய ஒரு துடுப்பாட்ட வீரர் என்றால் அது கிறிஸ் கெய்ல்தான். தன் இமாலய சிக்ஸர்களால் ரசிகர்களை வியக்க வைத்த கெய்ல் பெங்களூர் அணியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று கோஹ்லி தலைமையிலான ரோயல் செல்லஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடாத கெய்ல் இன்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் இறங்கினால் அது பஞ்சாப் அணிக்கு மேலும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.