விளையாட்டு

கெயில் வெளியேறினார்

(UTV | துபாய்) – பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்து மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் வெளியேறினார். இதனால் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் கெயில் விளையாடமாட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரீபியன் ப்ரீயமியர் லீக் தொடரின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்தவாறு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் இணைந்தார். இதனால் பயோ-பபுள் சூழலில் தொடர்ந்து இருந்ததால், கெயிலுக்கு பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் அணியிலிருந்து வெளிேயறினார்.

அடுத்துவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு மனரீதியாக தன்னைத் தயார் செய்வதற்காக போதுமான ஓய்வு தேவை என்பதால், அணியின் பயோபபுள் சூழலில் இருந்துவெளிேயறுவதாக கெயில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில் வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த சில மாதங்களாக நான் கரீபியன் ப்ரீமியர் லீக் பயோ-பபுள் சூழலில் இருந்தேன். அதைத் தொடர்ந்து நான் ஐபிஎல் பயோ-பபுள் சூழலுக்குள் வந்தேன். இப்போது எனக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். டி20 உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் அணிக்கு உதவுவதற்காக என்னை நான் கவனம் செலுத்தப் போகிறேன்.

ஆதலால், துபாயில் சிறிய இடைவெளியும் எடுக்கப்போகிறேன். எனக்கு இந்த ஓய்வை வழங்கிய பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அடுத்துவரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுைகயில் “ கிறிஸ்கெயிலுக்கு எதிராக நான் விளையாடிருக்கிறேன், அவருக்கு பஞ்சாப் அணியில் பயிற்சியாளராகவும் இருக்கிறேன். அவரைப் பற்றி எனக்குத் தெரியும், எப்போதும் முழுமையானகிரிக்ெகட் வீரராகஇருப்பார். அவரின் டி20 உலகக் கோப்பைக்காக அவர் தயாராக வேண்டும் எனும் அவரின் முடிவை அணி நிர்வாகம் மதிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனால் அடுத்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் கிறிஸ் கெயில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Related posts

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 07 விக்கெட்களால் வெற்றி

முதல் வெற்றி கொழும்பு கிங்ஸ் அணிக்கு

முகமது ஹபீசுக்கு கொரோனா ‘நெகடிவ்’