உள்நாடு

கெப் ரக வாகன விவகாரம் : விசேட 4 பொலிஸ் குழுக்கள்

(UTV | கொழும்பு) – இராணுவத்தினர் இரண்டு பேரை காயப்படுத்தி தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்வதற்காக 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் அந்த பிரதேசத்தினை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வவுனியா மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஓமந்தை பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கட்டளையை மீறி பயணித்த குறித்த கெப் ரக வாகனம் மோதியதில் இரு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

சட்டவிரோத மரக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு இராணுவத்தினரை மோதி சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

ஷானி தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்