உள்நாடு

கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் சிலரால் தாக்கப்பட்டதில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

(UTV | கொழும்பு) – காட்டு யானை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 54 வயதுடைய அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தின் போது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பொலிசார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர்; இருப்பினும் போராட்டக்காரர்கள் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளை தாக்கினர்.

இந்த மோதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முஷாரபுக்கு மார்க்க அறிவில் குறையுள்ளது – அவர் தவறாக பிறந்தாரா? முபாறக் மெளலவி காட்டம்

ஈஸ்டர் தாக்குதல்: பிரதிவாதி மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன்