சூடான செய்திகள் 1

கென்யாவில் இடம்பெறும் ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகரில், ‘சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டில்  இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

கென்ய நாட்டு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் (Uhuru Kenyatta) அழைப்பின் பேரில் ஜனாதிபதி நேற்றைய தினம் கென்யா சென்றார்.

மேலும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!

ரமழான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை சுற்றறிக்கை

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.